சாதனை என்னும் சொல் சோதனை என்னும் வார்த்தைக்குள் மறைந்திருப்பதுபோல, வேதனை தரும் எட்டாம் பாவத்தில் வெற்றியும் ஒளிந்திருக்கிறது.அணுசக்தி, மின்சாரம் (கேட்டை) காலபுருஷனின் எட்டாம் பாவமான விருச்சிக ராசியில் வருவது. அணுசக்தியை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம்.

Advertisment

அதுபோல எல்லா ராசிகளின் எட்டாம் பாவமும் அபரிமிதமான பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கியது.

anjenar

எட்டாம் பாவாதிபதியின் தசைகெடுதல் செய்யுமா? ஒருபாவத்திலுள்ள கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் அதிபதியே அந்த பாவத்திற்கான முதல்தர பலனைக் கொடுக்கமுடியும். ஒரு பாவத்தில் கிரகம் இல்லாதபோது மட்டுமே அந்த பாவாதிபதி முக்கியத்துவம் பெறுவார். அதனால் எட்டாம் பாவத்தில் உள்ள கிரகத்தின் நட்சத்திர அதிபதி அல்லது பாவாதிபதியின் நட்சத்திர அதிபதி, பாவத்தொடர்பு மற்றும் அம்சப் பலன்கள் போன்றவற்றைக் கொண்டே நல்ல அல்லது கெடுபலன்களைத் தீர்மானிக்கமுடியும்.

இதுதவிர எந்த ஒரு தசையும் முழுவதும் நன்மையாகவோ, கெடுதலாகவோ இருப்பதில்லை. (போதகன், வேதகன், பாசகன், காரகன் புக்திகளில் பலன் மாறும்).

லக்னபாவம் நேரடியாக எட்டாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளாதவரை பெரிய ஆபத்துகள் வருவதில்லை. எட்டாம் பாவத்தின் ஆரம்ப முனையின் நட்சத்திர- உப நட்சத்திர தசாபுக்திகளில் எச்சரிக்கை அவசியம். இதுதவிர எட்டாம் பாவத்தொடர்பில் இரண்டாம் பாவம் இருக்க, ஆபத்துகள் குறையும்.

எட்டாம் பாவத்தில் வலுப்பெற்ற புதன், சுக்கிரன் இருக்க நாடாளும் யோகம் தரும்.

எட்டாம் பாவமானது 2, 11-ஆம் பாவங்களின் தொடர்பு பெற்றால் எதிர்பாரா வருமானமும்; 6, 11 தொடர்பு பெற்றால் பரிசு பெறுதலும்; 2, 11 தொடர்பு- மூதாதையர், வாரிசுமுறை சொத்தும்; 4, 11-ஆம் பாவத்தொடர்பு- வாரிசுமுறை சொத்து, வீடு, வாகனத்தையும் தரும். 2, 6, 11-ஆம் பாவத் தொடர்பு- தொலைந்த பொருள் கிட்டும். 2, 11 (10) பாவத் தொடர்பு அறுவை சிகிச்சை நிபுணராக்கும்.

ஒரு ஜாதகரின் ஆற்றலைத் தூண்டி, ஆர்வத்தை உண்டாக்கி சாதனைகளைச் செய்யவைக்கும் பாவம் எட்டாம் பாவம். நடிகர் ரஜினிகாந்த் (சிம்ம லக்னம்- எட்டாம் பாவாதிபதி தசை- குரு தசை ஆரம்பம் 24-12-1982) குரு ராகவேந்திரர் அருளால் உலகப்புகழ் பெற்றார்.

எல்லா ஜாதகருக்கும் எட்டாம் பாவம் முக்கியம் என்றாலும், வெளிச்சத்தில் எடுத்து இருளில் காட்டப்படும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எட்டாம் பாவம் மிக முக்கியம். எட்டாம் பாவத்தினால் ஏற்படும் கெடுபலன்களைக் குறைக்க தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவரிடம் வைத்துப் பூஜித்த எட்டு குன்றிமணிகளை (பிள்ளையார் கண்) பூஜையறையில் வைத்து வழிபடவேண்டும்.

இதுதவிர இரண்டாம் மற்றும் ஏழாம் பாவத்தை அனுசரித்துப் பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும்.

ஊனமுற்றவர், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது எட்டாம் பாவக் கெடுபலன்களைக் குறைக்கும்.

எட்டாம் பாவாதிபதியின் தசையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் எட்டாததும் எட்டும்; கிட்டாததும் கிட்டும்.

செல்: 63819 58636